தென்னிந்திய திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் கடந்த வருடம் திரைக்கு வந்த ”வெந்து தணிந்தது காடு” படம் மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிந்தது. இப்படி இருக்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இதில் விக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அப்டேட் கொடுத்திருந்தது. இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்திருக்கும் ‘நரச்ச முடி’ என்ற பாடலை இன்று மாலை 5 மணிக்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இணையத்தில் வெளியிட உள்ளார்.