IPL-லில் தொடரும் தோனியின் லூட்டிகள்…, மீண்டும் தீபக் சஹரை அடித்த வீடியோ வைரல்!!

0
IPL-லில் தொடரும் தோனியின் லூட்டிகள்..., மீண்டும் தீபக் சஹரை அடித்த வீடியோ வைரல்!!
IPL-லில் தொடரும் தோனியின் லூட்டிகள்..., மீண்டும் தீபக் சஹரை அடித்த வீடியோ வைரல்!!

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிரபலமாக இருந்து வருகிறது. இந்த CSK அணியானது, தற்போது வரை 12 லீக் போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் 2வது இடத்தை எட்டி உள்ளது. இதில், கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியை CSK அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீசன் தல தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என பல்வேறு தகவல்கள் வெளி வந்தாலும், அதற்கு அவர் “நீங்கள் தான் கடைசி சீசன் என்று சொல்றீங்க நான் இல்ல” என தோனி கூறினார். இதனால், ரசிகர்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ஆனால், தோனியோ மைதானத்தில் சக வீரர்களை வம்பிழுத்து கொண்டு உற்சாகமாக இருக்கிறார்.

IPL வரலாற்றில் நிகழாத புதிய சாதனை படைத்த CSK…, “அரசன்(தோனி) அப்படி” என ஹர்பஜன் சிங் புகழாரம்!!

இதில், தோனி சமீபத்தில் தோனி பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் போது, தீபக் சஹரை அடிக்க போவது போல செய்கை செய்வார். உடனே, தீபக் சஹர் அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவிடுவார். மீண்டும், இவரையே தோனி வம்பிழுத்து உள்ளார். அதாவது, டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, தீபக் சஹரை தனது கையை கொண்டு அடிப்பது போல செய்கை விட்டார். ஆனால், அடிக்க வில்லை. அதற்கு சஹர் பயப்படுவது போல ரியாக்சன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here