கே.எல்.ராகுலுக்கு சர்பிரைஸ் கொடுத்த தோனி & கோலி…, திருமண பரிசாக கார், பைக்…, இதல்லவா நட்பு!!

0
கே.எல்.ராகுலுக்கு சர்பிரைஸ் கொடுத்த தோனி & கோலி..., திருமண பரிசு..., இதல்லவா நட்பு!!
கே.எல்.ராகுலுக்கு சர்பிரைஸ் கொடுத்த தோனி & கோலி..., திருமண பரிசு..., இதல்லவா நட்பு!!

நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு, பைக் மற்றும் காரை பரிசாக வழங்கியுள்ளனர் தோனி மற்றும் கோலி.

திருமண பரிசு

கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவைகளாக சுற்றித் திரிந்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி இருவரும் கடந்த 23 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம், நடிகை அதியா ஷெட்டியின் தந்தையும் நடிகருமான சுனில் ஷெட்டியின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து இவர்களது திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜய் சேதுபதியை சீரியலுக்கு தட்டி தூக்கிய ஜீ தமிழ்.., கடைசில இங்க வந்து நிறுத்திடீங்களே!!

இந்த நிலையில், கே.எல்.ராகுலின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து, கிரிக்கெட் வீரர்கள் கோலி மற்றும் தோனி இருவரும் விலை மதிப்புள்ள திருமண பரிசை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், கே.எல்.ராகுலுக்கு திருமண பரிசாக ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸ்கி நிஞ்சா பைக்கை வழங்கியுள்ளார் எம்.எஸ்.தோனி. அதே போல, விராட் கோலி ரூ.2 கோடி மதிப்புள்ள BMW காரை ராகுலுக்கு திருமண பரிசாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here