பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம் – கடைசியாக வெளியிட்ட நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ வைரல்!!

0
பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம் - கடைசியாக வெளியிட்ட நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ வைரல்!!
பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம் - கடைசியாக வெளியிட்ட நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ வைரல்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மக்கள் அனைவரையும் கவர்வதற்கு பலவித ரியாலிட்டி ஷோக்களை டிவி சேனல்கள் ஆரம்பித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘தீ” நடன நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டான்ஸ் ஷோவின் மூலம் நடன இயக்குனராக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் சைதன்யா.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுமட்டுமின்றி இவர் பல நடன இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். சொல்லப்போனால் தமிழில் மைக்கேல் ஜாக்சனாக விளங்கும் பிரபுதேவா கூட அவரின் நடன அசைவுகளை பாராட்டி பேசியுள்ளார். அப்பேற்பட்ட இவருக்கு சமீப காலமாக கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நெல்லை பகுதியில் இருக்கும் பிரபல கிளப் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்னர் பேசிய வீடியோவை இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, எனது குடும்பத்தினர் மற்றும் என்னுடன் பணியாற்றிய நண்பர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.

ஐயோ., என்ன கிரண் இது.., கண்ணுப்படும் கிளாமரை மறைக்காம காட்டி எங்க இளசுகளை திண்டாட வச்சுடீங்களே!!

கடன் தொல்லை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தெலுங்கு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here