விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய தயாநிதி மாறன் – ரஜினிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என கேள்வி..?

0

நடிகர் விஜயின் வீட்டில் இரண்டு நாட்களாக நடந்த வருமானவரித்துறை ரெய்டு அரசியல் வட்டாரத்தில் மிகப்பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் அரசியல் சம்மந்தம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிக்கு மட்டும் வரிவிலக்கு அளித்த வருமானவரித்துறை விஜயை மட்டும் ஏன் கார்னெர் செய்கிறது என தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

விஜய்க்கு சம்மன்..!

நெய்வேலியில் நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது அங்கு சென்ற வருமானவரித்துறையினர் நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தி அவரை அங்கிருந்து அவரது வீட்டிற்கும் அழைத்துச் சென்று 2 நாட்களாக சோதனை நடத்தினர். சோதனை முடிவில் விஜய் அவர்களின் வீட்டில் இருந்து எந்த விதமான பணமோ ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஆனால் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டில் 77 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் நேற்று நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் விவாதம்..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் தயாநிதி மாறன் இந்த வருட பட்ஜெட்டில் முழுவதும் பொய் ஆக தான் உள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் அரசின் நடைமுறையையும் சாடினார். தொடர்ந்து பேசிய அவர் ரஜினிக்கு மட்டும் வருமானவரித்துறையினர் சலுகை அளித்து உள்ள நிலையில் விஜயை மட்டும் ஏன் குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது என கேள்வி எழுப்பினார்.

திமுக விஜய்க்கு ஆதரவு..!

ஏற்கனவே இந்த ரெய்டு விவகாரத்தில் பல திமுக தலைவர்கள் மற்றும் சில கட்சியினர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தயாநிதி மாறன் மக்களவையில் விஜய்க்கு ஆதரவாக பேசியது நடிகர் விஜயை திமுக கட்சி தன பக்கம் இழுத்து ரஜினிக்கு எதிராக செயல்பட வைக்கப்போவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

இந்த சம்பவத்தின் இடையில் பல்லாயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் நெய்வேலியில் நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அவருக்கு தினமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here