ரோஹித்துடன் இணைந்த தவான்…, இதெல்லாம் ஒரு சாதனையா??

0
ரோஹித்துடன் இணைந்த தவான்..., இதெல்லாம் ஒரு சாதனையா??
ரோஹித்துடன் இணைந்த தவான்..., இதெல்லாம் ஒரு சாதனையா??

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், தவான் 28 ரன்களில் வெளியேறி ஒரு சாதனை பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார்.

தவான்:

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான, 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் கடைசி போட்டி இன்று ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 219 ரன்களுக்கு சுருண்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், தொடக்க வீரரான தவான் 45 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இவரது, ஸ்ட்ரைக் ரேட்டானது, வெறும் 62.22 ஆகும். இதன் மூலம், தவான் ஒரு காலண்டர் வருடத்தில், 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 75.11 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

ஒரே நேரத்தில் 12 கிரிக்கெட் வீரர்களுக்கு உடல் நிலை பாதிப்பு…, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் நடைபெறுமா??

இந்த ஸ்ட்ரைக் ரேட் மூலம், தவான், ரோஹித்துடன் ஒரு மோசமான பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது, ஒரு காலண்டர் ஆண்டில் இந்தியாவுக்காக மிகக் குறைந்த ஒரு நாள் ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர்கள் பட்டியலில் 4 வது இடத்தை தவான் அடைந்துள்ளார். முதல் மூன்று இடங்களில், கங்குலி (71.93), ரோஹித் சர்மா (72.57) மற்றும் கம்பீர் (74.67) ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here