தர்ஷா குப்தா செயலால் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

குக் வித் கோமாளி 2வில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை தர்ஷா குப்தாவிற்கு தற்போது கிடைத்துள்ள கௌரவத்தை இன்ஸ்டா வில் வெளியிட்டுள்ளார். பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சமூக சேவகி விருது:

தர்ஷா குப்தா, மாடல் துறையின் மூலம் தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். அவர் விஜய் டிவியில் வந்த அவளும் நானும் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். மேலும் ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற தொடரிலும் நடித்தார். இறுதியாக விஜய் டிவியில் வந்த செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

மேலும் விஜய் டிவியின் டிஆர்பி யை உயர்த்திய குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது. ருத்ர தாண்டவம் என்ற படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தர்ஷா குப்தா நிறைய சமூக சேவைகளையும் செய்து வந்தார். இவரின் இந்த சேவையை பாராட்டும் விதமாக சென்னை சல்யூட் என்ற இயக்கத்தின் சார்பாக அவருக்கு சமூக சேவகி விருது வழங்கப்பட்டுள்ளது.

அதை தனது ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். மேலும் அதில், “தனக்கு இந்த விருது கொடுத்த சென்னை சல்யூட் க்கு நன்றி. இந்த விருதை பல சமூக சேவை செய்யும் தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்”. என்றும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here