காமெடி நடிகர் சதீஷ் உடன் ஜோடியாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை… கேப்ஷன் பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்!!!

0

சின்னத்திரை மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதோடு சேர்ந்து ஒரு கேப்சன்  பதிவிட்டு உள்ளார்.

ஒரு மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகை தர்ஷா குப்தா.இவர் முள்ளும் மலரும் உள்ளிட்ட ஒரு சில  சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூர பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் அளவில்லாதது. மேலும் புகழுக்காக இவரும் பவித்ராவும் போடும் செல்ல சண்டை அனைவரையும் கவர்ந்து ஒன்று. என்ன தான் சீரியலில் வில்லியாக அனைவரையும் மிரட்டி வந்தாலும் தன்னுடைய சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது காமெடியில் வெள்ளித்திரையில் கலக்கி வரும் காமெடி நடிகர் சதீஷ் உடன் ஜோடியாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். அதோடு சேர்ந்து,’விரைவில் உங்களுக்கு ஒரு  ஆச்சரியம் வர உள்ளது’ என்பது போன்ற ஒரு தலைப்பையும் பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here