பள்ளி வயதுக்கு திரும்பிய குக் வித் கோமாளி பிரபலம் – ஷாக்கான ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தர்ஷா குப்தா தற்போது மீண்டும் பள்ளி வாழ்க்கையில் கால் பதித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி தர்ஷா

குக் வித் கோமாளி நகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது மக்கள் விரும்பும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இதில் கலந்துகொண்ட கோமாளிகளான புகழ், பாலா, ஷிவாங்கி மற்றும் மணிமேகலை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர். சமைக்க தெரியாமல் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் அனைவரும் ரசிக்கும் விதமாகவும் இருந்தது.

இரண்டாவது சீசன் அதனை விட சூப்பர் ஹிட். அதில் கலந்து கொண்டவர் தான் தர்ஷா குப்தா. இவர் ஆரம்பத்தில் ஜீ தமிழில் வெளியான முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்தவர். அந்த சீரியல் அவருக்கு அந்த அளவிற்கு பிரபலத்தை ஏற்படுத்தவில்லை.

அதன் பிறகு தான் அவர் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். கவர்ச்சி கடலில் இறங்கிய இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். விஜய் டிவியில் வில்லியாக நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. தற்போது அவர் நடித்து வரும் செந்தூர பூவே சீரியலில் பிளாஷ் பேக் சீன்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பள்ளி மாணவியாக நடித்துள்ளார்.எ அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here