அரசியலில் இறங்குகிறாரா நடிகர் தனுஷ்?? முதல்வராக்க துடிக்கும் முக்கிய பிரபலம்! ஆவலில் ரசிகர்கள்!!

0

நடிகர் தனுஷை தெலுங்கு படமொன்றில், முதல்வராக நடிக்க வைக்க பிரபல இயக்குனர் சேகர் கம்முலா தயாராகி வருவதாக, டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது இவர், வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், டோலிவுட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு லீடர் என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் சேகர் கம்முலா. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் ராணா, முதல்வராக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

தற்போது இந்த படத்தின் 2ம் பாகத்தை எடுக்க சேகர் கம்முலா, தயாராகி வருவதாக பேசப்படுகிறது. இந்தப் படத்தில், நடிகர் தனுஷை அவர் நடிக்க வைக்க உள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் ஸ்கிரிப்ட் தயாராக இல்லாததால் தனுஷ் வேறு படங்களில் நடிக்கச் சென்று விட்டாராம். தற்போது தனுஷை சந்தித்து லீடர் 2 படத்தின் கதையை சேகர் கம்முலா தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், மாநில முதல்வராக நடிக்க தனுஷ் ஒப்புக்கொள்வாரா?  என்பதை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here