தனுஷ் இப்படி எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாரா? அவ்ளோ தான், இனி மொத்த கூட்டமும் அவர் பக்கம் தான்!!

0
தனுஷ் இப்படி எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாரா? அவ்ளோ தான், இனி மொத்த கூட்டமும் அவர் பக்கம் தான்!!

ரசிகர்கள் மனதில் ஹீரோவாக மட்டும் வலம் வந்த நடிகர் தனுஷ், தற்போது “நானே வருவேன்” படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நானே வருவேன்:

நீண்ட இடைவெளிக்கு பின் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் ‘நானே வருவேன் படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதல் சிறப்பாக, செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதனால் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு பஞ்சம் இருக்காது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திருச்சிற்றப்பலம் படம் மூலம் தனுஷ் ரசிகர்களை ஏகபோக மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில், ஒரு தனுஷ் மிரட்டல் லுக்கில் வில்லன் போல வருகிறார். மற்றொரு பக்கம் நல்லவன் போன்ற கதாபாத்திரத்தில் இன்னொரு தனுஷ் வலம் வருகிறார். மேலும் இவர்களுக்கு இணையாக செல்வராகவனும் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.

இந்த இரண்டு தனுஷ் கதாபாத்திரங்களுக்கு இடையே என்ன நடக்கப்போகிறது என்பதை ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கியுள்ளார், இயக்குனர். இந்த மாதம் இப்படம் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன. தனுஷ் நடிப்பில் இது ஒரு வித புதிய பயணம் என்பதால், இனி வரும் நாட்களில் ரசிகர்களின் மொத்த கூட்டமும் இவர் பக்கம் தான் இருக்கும் என்பது பாராது கருத்தாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here