தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகர் தனுஷ் – மாதம் 68,000 இழப்பீடு வழங்க கோரிக்கை! நீதிமன்றம் நோட்டீஸ்!!

0
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகர் தனுஷ் - மாதம் 68,000 இழப்பீடு வழங்க கோரிக்கை! நீதிமன்றம் நோட்டீஸ்!!
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகர் தனுஷ் - மாதம் 68,000 இழப்பீடு வழங்க கோரிக்கை! நீதிமன்றம் நோட்டீஸ்!!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த சீராய்வு மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தனுஷுக்கு நோட்டீஸ்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக நடித்தவர் நடிகர் தனுஷ். இவர் தங்களது 3வது மகன் என்றும், மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதுகுறித்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இதையடுத்து தம்பதிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுபோக, நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை, மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, கதிரேசன் மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.


இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுசுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வயதான தம்பதிகள் தங்களுக்கு மாதந்தோறும் 68000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தன் மீதான இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் தனுஷ் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here