மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து.. எதும் உங்களை அசைக்காது – அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!

0
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!

விவகாரத்து உள்பட பல சர்ச்சைகளில் சிக்கினாலும் சினிமாவில் அசுரனாக திகழ்பவர் தனுஷ். தற்போது இவர் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் வெளியாகியுள்ளது.

திருச்சிற்றம்பலம் வசூல்:

காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமாவில் வெற்றி கனியை ருசிக்க ஆரம்பித்தவர் நடிகர் தனுஷ். தன் கேரியரின் தொடக்கத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும் தொடர்ந்து விடாமுயற்சி செய்து தற்போது முன்னணி நாயகனாக உயர்ந்துள்ளார். தமிழ் தாண்டி ஹிந்தி, ஆங்கில சினிமாவிலும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் தன் விவகாரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டாலும் அது இவரின் கேரியரில் எந்த சறுக்கலையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் தான் தனுஷ் நடிப்பில் நித்யா மேனன், ராசி கன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வெளியான படம் திருச்சிற்றம்பலம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் வசூலும் வலுவாக உள்ளது. இதுவரை இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 60 கோடி வரை வசூலித்து சாதனை புரிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here