வாத்தி படத்தில் தனுசுக்கு மாணவனான அவரது இளைய மகன் – அப்போ மிரட்டல் காம்போ தான் போங்க!!

0

நடிகர் தனுஷ் நடித்து வரும் வாத்தி என்ற படத்தில், அவருக்கு மாணவனாக அசுரன் பட நடிகர்  கென் கருணாஸ் நடித்து வருவதாக அதிரடி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 தனுஷ் இளைய மகன்:

நடிகர் தனுஷ், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வாத்தி. இந்த படம் தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் அவருக்கு நாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். தற்போது, இந்த படத்தில் இவருக்கு மாணவராக நடிகர் கென் கருணாஸ் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தில் தனுஷ்க்கு இளைய மகனாக நடித்திருந்த, கென் மீது அப்போதிருந்தே தனுசுக்கு தனிப்பாசம் இருந்து வந்ததாக பேசப்படுகிறது. அதனால், இந்தப் படத்தில் இவரை நடிக்க வைத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here