தனுஷின் “தி கிரேமேன்” திரைப்படத்தின் மாஸ் அப்டேட் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

நடிகர் தனுஷ்

திரையுலகில் தற்போது தனக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் தான், நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தான், தனுஷ். இவர் முதன் முதலாக “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் வாயிலாக தான் தமிழ் சினிமாவில் காலடி பதித்தார். அந்த படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியதால் தனது முதல் திரைப்படத்திலேயே இவர் பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்தியாவிற்கு நிதியுதவி செய்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் – குவியும் வாழ்த்துக்கள்!!

இதனை அடுத்து இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கி கொண்டார். இவர் தமிழ் சினிமாவோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்தி துறையில் கால் பதித்த ஒரு ஹீரோ இவர் தான். இவரது நடிப்பு பயணம் இத்துடன் நின்று விடவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இவர் ஆங்கில திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். “தி க்ரெமேன்” என்று பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகின்றது.

காலிஃபோர்னியாவில் இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று வருகின்றது. தனது மனைவியுடன் தனுஷ் அங்கு படப்பிடிப்பு தளங்களில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here