‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ – OTT இல் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம்!!

0

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் தாதாவாக நடித்திருக்கும் படம் ஜகமே தந்திரம், இன்று (ஜூன் 18, 2021) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளது.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்த படம் தான் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தை தயாரித்தது ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இசையமைத்தது சந்தோஷ் நாராயணன்.

 

கொரோனாவால் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. ‘கர்ணன்’ வெற்றிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ வெளியாவதால் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளன.உலகம் முழுக்க தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் இன்று வெளியான நிலையில் நேற்றே படக்குழு படம் தொடர்பான காமன் டிபியை வெளியிட்டது.

கடந்த மே மாதமே தனுஷ் ரசிகர்கள் இப்படத்திற்கு ஆவலுடன் காத்து இருந்தனர். தற்போது படம் வெளியான நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here