ஐஸ்வர்யா ரஜினி, தனுஷ் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு – கோரிக்கையை ஏற்று நீதிபதி அதிரடி!!

0
தனுஷ் பாவம் பா.. ஒரவஞ்சனை செய்யும் ஐஸ்வர்யா - ஆண் நண்பருடன் சேர்ந்து அவரே வெளியிட்ட பதிவு!

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடித்த காட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதிரடி தீர்ப்பு:

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான, வேலையில்லா பட்டதாரி படத்தின் சில காட்சிகளில் அவர் புகை பிடிக்கும்  சீன்கள் இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிகள் வரும்போது, புகைப்பிடிப்பது உயிருக்கு கேடு என்று அறிவிப்பு இடம்பெறவில்லை. இதற்கு எதிராக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீது சென்னை சைதாப்பேட்டை 18 வது நீதிமன்றத்தில், தமிழ்நாடு பொது சுகாதார மையம் தடுப்பு மற்றும் மருந்து துறை இயக்குனரகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்  அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என ஐஸ்வர்யா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இவருக்கு ஆதரவாக, நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் நடிகர் தனுஷ் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கையும் விசாரித்த நீதிபதி  தனுஷ் நேரில் ஆஜராவதற்கு  விலக்கு அளித்து, இரண்டு பேரின் வழக்கையும் ஆகஸ்ட் 10 ஆம்  தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here