இன்று தனுஷ் பிறந்தநாள்: இந்திய அளவில் கலக்கும் #HappyBirthdayDhanush ஹேஷ்டேக்!!

0

நடிகர் தனுஷ் இன்று (28 ஜூலை) தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனுஷ் பிறந்தநாளை ஒட்டி நேற்று நள்ளிரவு வெளியான காமன் டிபி மற்றும் #HappyBirthdayDhanush ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

சாதாரண நடிகராக துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். சினிமாவில் பெரிதாக சோபிக்க மாட்டார் என்று கருதப்பட்ட இவர் தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் தன் பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் பலரால் உருவ கேலி செய்யப்பட்ட தனுஷ் பின்னர் தன் திறமையால் தற்போது முன்னணி நடிகராக உருவாகியுள்ளார்.

இன்று இவருக்கு 38 வது பிறந்த நாள் என்பதால் கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் இருக்கும் காமன் டிபி ரசிகர்கள் இடையே பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் ட்விட்டரில் #HappyBirthdayDhanush  என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கின் கீழ் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here