
கோலிவுட் திரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தனுஷ். இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரலாற்று பாணியில் உருவாகியுள்ள ”கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு கொடுத்துள்ளது.

ஆனால் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இருக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ”லால் சலாம்” திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் நேருக்கு நேர் மீண்டும் மோத இருக்கிறார்கள்.