தமிழ் சினிமாவில் முக்கிய தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் தங்கள் பிரிவை அறிவித்தனர். இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்ற தெளிவான காரணம் தற்போது வரை தெரியவில்லை. தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் என பிசியாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் தன் சினிமா வேளைகளில் கவனம் செலுத்துவதோடு Fitness-யிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தன் ஆண் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போட்ட பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், எனது உண்மையான அமைதியான நண்பர், எனது Fitness பயணத்தில் பெரும் பாங்காற்றியவர். இன்று அவரின் பிறந்தநாள். இன்று 47 வயதாகும் அவர் என்னுடன் சேர்ந்து 50 கிலோமீட்டர் சைக்கிளிங் வந்தார். வயது கூட கூட கிலோமீட்டரையும் கூட்ட உள்ளதாக ஐஸ்வர்யா அதில் குறிப்பிட்டு உள்ளார்.
அந்த நபருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் சமீபத்தில் தான் தனுஷும் தன் பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் ஐஸ்வர்யா சமூகவலைத்தள பக்கத்தில் தனுஷுக்கு வாழ்த்து கூறவில்லை. இதை குறிப்பிட்டு என்ன இருந்தாலும் முன்னாள் கணவர் என்ற அடிப்படையில் ஒரு பெயருக்காவது தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்