நடிகர் தனுசுக்கு எதிரான வழக்கு – நோட்டீஸ் அனுப்ப உத்தரவு! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி!!

0
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!

நடிகர் தனுஷ் தன் மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் தொடுத்த வழக்கில், தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி உத்தரவு:

நடிகர் தனுஷ் தனது மகன் என்று கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில் தனுஷ் சார்பாக அளிக்கப்பட்ட ஆவணங்கள் போலியாக இருப்பதாக கூறி, அதனை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கதிரேசன் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆனால், தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் குறித்த, மாநகராட்சி அறிக்கையை கருத்தில் கொள்ளாமல், நீதித்துறை இந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி, கதிரேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரித்த நீதிபதி இளஞ்செழியன், இதுகுறித்து நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here