தமிழகத்தின் இந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை – நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தின் இந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை - நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தின் இந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை - நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சதுரகிரி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால், இக் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என இரட்டை லிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் நடை திறக்கப்படும். தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாகவும், புற்றுநோயை கூட போக்கும் மூலிகை உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் சிவ பக்தர்களின் கூட்டம் மாதந்தோறும் இந்தக் கோவிலில் கட்டுக்கடங்காமல் இருக்கும் .

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் இப்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு டிசம்பர் 7ம் தேதி மாண்ட்ஸ் புயலாக உருவெடுக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கட்டுமான பணிகளுக்கு திடீர் தடை – அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இதைத்தொடர்ந்து, டிசம்பர் 7 ல் பௌர்ணமி வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தர விரும்புவர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வரும் மழை தண்ணீர் சதுரகிரி செல்லும் பாதையில் வெள்ளமாக செல்வதாலும், புயல் அச்சுறுத்தலினாலும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பௌர்ணமிக்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here