தேவர் மகன் இரண்டாம் பக்கத்தில் வில்லனாக மாஸ்டர் பட நடிகரா?? ஹீரோ யாரு தெரியுமா??

0

பிரபல நடிகரான கமலஹாசன் கதை எழுதி உருவான தேவர் மகன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கும் நிலையில் அதில் நடிக்க இருப்பவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தேவர் மகன் 2

1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றிநடை போட்டது. முக்கிய நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்ததாலேயே அதிக வரவேற்பு. மேலும் இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு மேலும் மெருகேற்றியது.

இந்த படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் கமலஹாசன் தான் இந்த படத்தின் கதையாசிரியர். பிரபல இயக்குனரான பரதன் தான் இந்த படத்தை இயக்கியது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படி வெற்றிநடை போட்ட தேவர் மகன் திரைப்படத்தின் இரண்டாவது தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான கதையையும் கமல் தான் எழுதுகிறாராம். இதில் பிரபல நடிகரான விக்ரம் நாயகனாகவும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here