சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து.,அண்ணாச்சிக்கு வந்த புது தலைவலி! உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி விசாரணை!!

0
சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து.,அண்ணாச்சிக்கு வந்த புது தலைவலி! உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி விசாரணை!!

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் தீ விபத்தை தொடர்ந்து கட்டுமான பணி மற்றும் பாதுகாப்பு வசதி குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ்:

தமிழகத்தில் வர்த்தக துறைகளில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் தலை சிறந்து விளங்குகிறது. எனவே இந்த நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு மாவட்டங்களிலும் பரந்து விரிந்து உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி முதல் மதுரை M.G.R. நிலையம் (மாட்டுத்தாவணி) அருகில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமான பணி மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் திறந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஹென்றி தீபன் மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு சமர்ப்பித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பேருந்து நிலையம், மருத்துவமனை, சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்களின் மத்தியில் ஏரி நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் பல்வேறு இன்னல்களுக்கு வழிவகுக்கும். எனவே இந்த கிளைக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “இப்படி முழுமை பெறாத நிலையில் உள்ள கட்டிடத்துக்கு உரிய அனுமதி வழங்கியது குறித்த அறிக்கைகளை காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட உயர்மட்ட குழு அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 9வது தளத்தில் அமைந்த கேண்டினில் தீ விபத்து ஏற்பட்டது. இவை அதிவேகமாக பரவிய நிலையில் தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் ஊழியர், வாடிக்கையாளர் உள்ளிட்டவர்களுக்கு எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டனர். இதையடுத்து இது சம்பந்தமான புகார் மனுவையும் மனுதாரர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பாதுகாப்பு வசதியை மேம்படுத்தவில்லை என குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விரிவான விசாரணை மார்ச் 13ம் தேதி நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here