சென்னையில் வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்.., தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி எச்சரிக்கை!!

0
சென்னையில் வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்.., தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி எச்சரிக்கை!!
சென்னையில் வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்.., தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி எச்சரிக்கை!!

டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை குறித்து தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்:

சமீப காலமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது. தற்போது சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களுக்கு மழையால் வரும் நோய்கள் அதிகமாக பரவி வருகிறது . பெரும்பாலான குழந்தைகளுக்கு அதிகம் டெங்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த எட்டு வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதுவரை 5182 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்காக அரசாங்கம் தகுதி நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக யாருக்காவது காய்ச்சல் தொற்று இருந்தால் 8438353355 என்ற எண்ணிற்கு whatsapp அளிக்க வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு வேலை நியமனம்.., மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மேலும் தனியார் மருத்துவமனைகளில் தினந்தோறும் பதிவாகும் டெங்கு காய்ச்சல் குறித்த தகவல்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்படும். மேலும் இதை பின்பற்றாத தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here