தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் கட்?? வெளியான ஷாக் தகவல்!!

0
தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் கட்?? வெளியான ஷாக் தகவல்!!
தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் கட்?? வெளியான ஷாக் தகவல்!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த பொருட்களுடன் சேர்த்து, தமிழக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது வரை நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தை, தமிழகம் முழுவதும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்வதற்கான கோரிக்கைகளும் வலுத்து வருகின்றனர். அதாவது, கடந்த வாரம் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்… தமிழக அரசு கொடுத்த பதில் மனு.., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மேலும், இதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தால் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெயே ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here