நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் மறைவு – இறுதிச் சடங்கில் அவரே பங்கேற்க முடியாத சோகம்!!

0

தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக உள்ள, மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பு காரணமாக தனது 56வது வயதில் உயிரிழந்துள்ளார்.

நடிகர் அண்ணன் இறப்பு :

தெலுங்கு சினிமாவில், முன்னணி நடிகராகவும் பிரபல தயாரிப்பாளரும் ஆக விலங்கி வந்தவர் நடிகர் ரமேஷ் பாபு. இவர் டோலிவுட் உலகின் ஜாம்பவான் கிருஷ்ணாவின் மூத்த மகன் என்பதும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1974ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான ரமேஷ் பாபு, 1987 ம் ஆண்டு வெளியான சாம்ராட் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து சினிமாவில் கொடிகட்டி பறந்தார். மாரடைப்பு காரணமாக, ஹைதராபாத் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட இவர், வழியிலேயே உயிரிழந்தார்.

நடிகர் மகேஷ்பாபு ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பதை ட்விட்டரில் தெரிவித்தார். இந்த நிலையில் இவர் தன் அண்ணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. மகேஷ்பாபுவின் இந்த துயர நிலையை நினைத்து, அவரது ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here