டெல்டா வைரஸை விட பலம் பொருந்திய “மு” வைரஸ் – தடுப்பூசிக்கு கட்டுப்படாது : உலக சுகாதார நிறுவனம் தகவல்!

0
18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!

தற்போது உள்ள டெல்டா வைரஸை விட அதிக பலம் கொண்டதாக மு என்ற வைரஸ் உள்ளதாகவும், இது தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் மு வைரஸ்:

உலகம் முழுவதும் டெல்டா வகை வைரஸான கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது.  இதனை அடுத்து, மாநிலங்கள் கொண்டு வந்த பொது முடக்கத்தினாலும், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகளின் பயன்பட்டாலும் தொற்றின் தீவிரம் கட்டுப்படுத்தப்பட்டது.  இதனை அடுத்து இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர்.

எனவே இந்த வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து மூன்றாம் அலை வந்தால், அதை தடுக்கும் வீரியம் மிக்க தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில், ஆய்வறிஞர்களால் இது குறித்த சோதனை தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

 

இதனை அடுத்து,  வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் முன்பே, நாட்டில் “மு” என்று பெயரிடப்பட்ட புதிய வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது மக்களிடம் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் தெரிவித்துள்ளதாவது, இந்த வைரஸ் இரண்டாம் அலையின் போது உருமாற்றம் அடைந்த “டெல்டா வகை ” வைரஸை விட அதிக  ஆபத்தும், அதிகம் பரவல் தன்மையும் கொண்டது என தெரிவித்துள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் உள்ள எந்த தடுப்பூசியும் இந்த வைரஸை கட்டுப்படுத்தாது என்றும், அதனை கட்டுப்படுத்தும் புதிய தடுப்பூசிகள் விரைவில் கண்டறியப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது வரை இந்த மு வைரஸ் கண்காணிக்கப்படும்  பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வைரஸ் குறித்த பதிவு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here