Monday, August 2, 2021

அரசே அறிவிச்சாலும் எங்களுக்கு தளர்வுகள் வேண்டாம்.. கடையை மூடி வீட்டுக்கு கிளம்பிய வணிகர்கள்!!!

Must Read

ஜம்மு & காஸ்மீர் அரசு, ஜூன் 20 ஆம் தேதி 8 நகரங்களில் வார இறுதி நாட்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாக அறிவித்து இருந்தது. ஆனால் ஜம்முவில் ரியாசி மாவட்டத்தின் கத்ரா பகுதியில் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் கண்டிபிடிக்கப்பட்டதை அடுத்து, நேரு சந்தை வர்த்தகர்கள் கூட்டமைப்பு, வார இறுதி நாட்களில் நேரு மார்க்கெட் மற்றும் அதை சார்ந்துள்ள பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்காது என்று அறிவித்துள்ளனர்.

தற்போது இந்திய நாட்டில் கொரோனா மூன்றாம் அலைக்கு காரணமாக உள்ள டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது. ஒவ்வொரு மாநில அரசும் மூன்றாம் அலை பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

  

அதே போல ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு ஜூன் 20 ஆம் தேதி சில தளர்வுகளை அளித்தது. அதில் வார இறுதி நாட்களில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு 8 நகரங்களில் நீக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்முவில் உள்ள ரியாசி மாவட்டத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆபத்தை உணர்ந்த வர்த்தகர்கள் இனி சனி மற்றும் ஞாயிறு கடைகள் திறக்கப்படாது என்று அறிவித்தனர்.

மேலும் இதுகுறித்து உள்ளூர் வர்த்தகர்கள் அமைப்பின் தலைவர் தீபக் குப்தா கூறும்போது, “நிலைமையை கருத்தில் கொண்டு அடுத்த 3 வாரங்களுக்கு நேரு மார்க்கெட் மற்றும் அதை சார்ந்துள்ள பகுதிகளில் வார இறுதி நாட்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படாது” என்று அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -