தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 24,000 கன அடி நீரை காவிரி மேலாண்மை திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “காவிரி விவகாரம் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை கொண்டு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.” என கூறியிருந்தார். அதன்படி 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையம் திறந்து விட்டிருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தற்போது இந்த காலக் கெடு முடிவடைந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “தற்போது கர்நாடகாவிடம் 53 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட உள்ளேன்.” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலம்: உயர்நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட அதிரடி தகவல்!!