டெல்டா ரக கொரோனா வைரஸ், பெரிய அளவில் அழிவுகளை ஏற்படுத்தும் .. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WHO!!! 

0

உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ரியான் உருமாற்றம் அடைந்த டெல்டா ரக கொரோனா வைரஸ், முன்பு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அல்ல. இது அதைவிட பலமடங்கு வீரியம் மிக்கது மற்றும் பெரிய அளவில் அழிவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரண்டாம் அலை முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் இந்திய விஞ்ஞானிகள் மூன்றாம் அலை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை தாக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

 

ஆனால் உலகின் சில நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ளது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை கொரோனா மூன்றாம் அலை ஆட்டி படைத்து வருகிறது. இதற்கு டெல்டா ரக கொரோனா வைரஸ் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ரியான் டெல்டா ரக கொரோனா வைரஸ் பற்றி பல அதிச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “டெல்டா ரக கொரோனா வைரஸ், மிகவும் திடமானதாகவும் வீரியம் மிக்கதாகவும் உள்ளது. இது முன்பு இருந்த கொரோனா வைரஸ் போல இல்லை. இது பெரிய அழிவை உண்டாக்கக்கூடியது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த டெல்டா ரக கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் முதன் முதலில் பரவ தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here