உலகில் 111 நாடுகளில் உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் பரவியுள்ளது – WHO எச்சரிக்கை!!!

0

பல உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உருமாறிய டெல்டா ரக கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

காலத்திற்கு ஏற்றவாறு கொரோனா தன்னை வெவ்வேறு விதமாக உருமாறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகில் கொரோனா வைரஸின் டெல்டா ரகம் தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த டெல்டா ரகம் பல உருமாறிய வைரஸை விட மிகுந்த வீரியம் மிக்கது என ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை மிக வேகமாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது இந்த டெல்டா வைரஸ் தான். இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார நிருவனம் உருமாறிய டெல்டா ரக கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவியுள்ளதாகவும், தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here