தடுப்பூசி போடலையா?? அப்போ சம்பளத்தில் இருந்து ரூ.15000 பிடித்தம் – ஊழியர்களை அலற வைத்த நிறுவனம்!!

0
அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்ற பகிர் அறிவிப்பை தற்போது விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருடக்கணக்கில் அலையலையாக நீட்டித்து வருகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் பல்வேறு விதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனாவிலிருந்து மக்களை விடுவிக்க தடுப்பூசியே சிறந்த தீர்வாக உள்ளது.
இதனால் அரசும், மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். இதை உணர்ந்து மக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முன்வந்தாலும், சில பேர் சில காரணங்களால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. மேலும் ஒரு வேளை ஊழியர்களுக்கு கொரோனா பாதிக்கபட்டால் அவர்களின் சிகிச்சைக்கு தலா 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here