‘சீரியலில் குடும்பப்பாங்கா இருந்தாலும் நிஜத்துல நான் இப்படி தான்’ – வைரலாகும் சன் டிவி பிரபலம் புகைப்படம்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலின் நாயகி டெல்னா டெவிஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அன்பே வா டெல்னா டெவிஸ்

ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது அன்பே வா சீரியல் தான். பூமிகா வருண் ஜோடிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் தான் நல்ல வரவேற்பு.

பூமிகாவாக நடிக்கும் டெல்னா முதலில் வெள்ளித்திரையில் நடித்தவர் தான். தமிழில் குரங்கு பொம்மை என்ற படத்தில் தான் நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்திலும் 3 படங்களில் நடித்துள்ளார்.

இத்தனை படங்களிலும் கிடைக்காத புகழ் அவருக்கு அன்பே வா சீரியல் மூலம் கிடைத்தது. தற்போது அனைத்து வலைப்பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் டெல்னா டேவிஸுக்கு அலைமோதி வருகின்றனர்.

அவரது துறுதுறுப்பான நடிப்பும் வருணுக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் அன்னியோன்யமும் மக்களுக்கு பிடித்தும் போனது. சீரியலில் எவ்வளவு குடும்ப பாங்காக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மாடர்ன் மங்கையாகவே இருக்கிறார் டெல்னா தனது புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here