தமிழிலிருந்து ஹிந்திக்கு தாவிய அன்பே வா சீரியல் நாயகி.. வேற லெவல் லுக்கில் வெளியான வீடியோ!!!

0

அன்பே வா சீரியல் கதா நாயகி டெல்னா டேவிஸ் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அழகிய லெஹங்காவில் மிரள வைக்கும் அழகில் இவர் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஒளிபரப்பான சில மாதங்களிலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்த சீரியல் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் அன்பே வா தொடர். இத்தொடரில் பூமிகா கதாபாத்திரத்தில் வரும் டெல்னா டேவிஸின் அழகில் மயங்காத ரசிகர்கள் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு சின்னத்திரையில் அழகு பதுமையாக வலம் வருபவர் இவர்.

டெல்னா டேவிஸ், அன்பே வா தொடரில் நடிப்பதற்கு முன்பே வெள்ளித்திரையில் தோன்றியவர். இவர் முதலில் அறிமுகமாகிய படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பத்ரா. பின்னர் 2017 ஆம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படத்தில் நடித்து இருந்தார். பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் குதித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பொதுவாக தமிழ் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து ஷேர் செய்வார். தற்போது சற்று வித்தியாசமாக ஹிந்தி பாடலுக்கு அழகிய லெஹன்கா அணிந்து டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here