ரெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவத டா… ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுக்கும் அன்பே வா சீரியல் நாயகி..

0

சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலின் கதா நாயகி பூமிகா கதாப்பாத்திரத்தில் வருபவர் டெல்னா டேவிஸ். தற்போது இவர் ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே கொள்ளாதே பாடலுக்கு ரீல்ஸ் ஒன்றை செய்து பதிவிட்டுள்ளார். கமெண்ட்ஸில் இவர் அழகை வருணித்து வருகின்றனர் இவர் ரசிகர்கள்.

டெல்னா டேவிஸ் சின்னத்திரையில் தோன்றுவதற்கு முன்பே வெள்ளித்திரையில் குரங்கு பொம்மை படத்தில் கதா நாயகியாக அறிமுகமானவர். அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் பெரிதளவில் இல்லாததால் சின்னத்திரையில் களமிறங்கி தற்போது சன் டிவியின் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார். அன்பே வா வருண்-பூமிகா ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதே சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பூவா தலையா நிகழ்ச்சியில் டெல்னா டேவிஸ் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பின் போது ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே கொள்ளாதே பாடலுக்கு வெள்ளை நிற சுடிதார் அணிந்து ரீல்ஸ் ஒன்றை செய்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here