சுவையான “கொங்குநாட்டு மீன் குழம்பு”.,, இந்த மாதிரி செஞ்சு அசத்துங்க!!

0

அசைவ பிரியர்களுக்கு வாரத்தில ஒரு முறையாச்சு மீன் குழம்பு சாப்பிடல, அப்டினா அவுங்களுக்கு ஒரு வாய் சாப்பாடு கூட இறங்காது. அப்படி உள்ளவர்களுக்கு, “கொங்குநாட்டு மீன் குழம்பு” செஞ்சு கொடுங்க ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க. அப்புறம் மீன்களில் உடம்புக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கு. அதனால குழந்தைகளுக்கு மீன் சாப்பிடக் கொடுத்து பழக்குவது ரொம்ப நல்லது. மேலும் “கொங்குநாட்டு மீன் குழம்பு” செய்வது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 • மீன் – 1/2 கிலோ
 • வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
 • கடலை எண்ணெய் – தேவையான அளவு
 • தக்காளி – 2 பழம்
 • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
 • புளி – தேவையான அளவு(அதிகம் புளி சேர்க்க கூடாது)
 • வர மிளகாய் – 4
 • பெரிய வெங்காயம் – 2
 • சின்ன வெங்காயம் – 10
 • பட்டை – 2
 • சோம்பு – 1/2 டீஸ்பூன்
 • மல்லி – 2 டீஸ்பூன்
 • சீரகம் – 1/2 டீஸ்பூன்
 • பூண்டு – 5 பல்
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • தேங்காய் பால் – 1/2 கப்
 • உப்பு – தேவையான அளவு

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் பட்டை ,சோம்பு , மல்லி, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை,வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து போட்டு வதக்க வேண்டும். இதையடுத்து நறுக்கிய தக்காளி , மஞ்சள் தூள், சின்ன வெங்காயம் இதையெல்லாம் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது இவற்றை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்க வேண்டும். இப்போது குழம்புக்கு தேவையான மசாலா தயார். மேலும் வேறொரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

பிறகு பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்க வேண்டும். இந்த சமயத்தில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து புளி கரைசல், தேங்காய் பால் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விட வேண்டும். இப்போது சுத்தம் செய்த மீன்களை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்தால் “கொங்குநாட்டு மீன் குழம்பு” ரெடி. மூடியை திறந்து பார்க்கும் போதே மீன் குழம்பு ஸ்மெல் கமகமன்னு வரும். சாதத்துடன் சேர்த்து வைத்து சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here