
நாட்டில் ஒரு சில முக்கிய நிகழ்வுகளின் போது, பாதுகாப்பு பணி காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் 19 நாடுகள் பங்கு பெரும் “ஜி 20 உச்சி மாநாடு” டெல்லியில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக செப்டம்பர் 8 முதல் 11ஆம் தேதி வரை டெல்லிக்கு செல்லக்கூடிய ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதனால் 300க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்தும், வழித்தடங்கள் மாற்றியும் இயக்கப்பட உள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்து உள்ளனர். இந்த அறிவிப்புக்கு ரயில் பயணிகள் உள்ளிட்ட பலரும் ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
TNPSC தேர்வர்களே…, இந்த 12 கேள்விக்கு சரியான விடையை நீங்க சொல்லிட்டா …, 75% தேர்வுக்கு நீங்க தயார்!!