ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்..! உத்தரவு பிறப்பித்த அரசு!!!

0

டெல்லி அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு ரு. 5 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா என்னும் கொடிய நோயின் இரண்டாம் அலையில் முதலுதவிக்காகவும், சிகிச்சைக்காகவும் அத்தியாவசியத் தேவையான `ஆக்ஸிஜன்’ என்னும் பிராண வாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தாலே பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை தான் தற்போது இந்தியாவில் நிலவி வருகிறது.

 

இந்நிலையில் டெல்லி அரசு ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு உள்ளது. டெல்லி அரசால் நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு, நோயாளிகள் மரணம் மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீட்டுத் தொகையாக வழக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. தற்போது வந்த உத்தரவின்படி அந்நோயாளி ஒருவேளை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தால் அவருக்கு இந்த இரு இழப்பீட்டுத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here