‘வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடெங்கும் லாரிகள் எதுவும் ஓடாது’ – மோட்டார் சங்கம் அதிரடி!!

0

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வருகிற டிசம்பர் 8ம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என அகில இந்திய மோட்டார் காங் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது என தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 8ம் தேதி லாரிகள் வேலைநிறுத்தம்:

வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டிசம்பர் 8ம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதிகளில் போராட்டம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “டெல்லி சலோ” என்று பெயரில் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

35 பிரதி நிதிகளுடன் நேற்று மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள் மத்திய வேளான் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தக மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர்கள் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தைகளின் முடிவில் விவசாய பிரதி நிதிகள் சட்டத்தை ஏற்க மறுத்தனர்.

டிசம்பர் மாதம் பொது முடக்கம் தளர்த்தப்படுமா??முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!!

பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் கூறும் பிரச்சனைகளை ஆய்வு செய்ய விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கூடிய 5பேர் கொண்ட குழுக்களை நியமிக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், விவசாயிகள் கடந்த முறை நியமித்த குழுக்கள் எந்த தீர்வும் எடுக்கவில்லை, சரியான தீர்வை தரவில்லை என்று கூறி சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விவசாய பிரதி நிதிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here