டெல்லி நீதிமன்ற வாயிலில் துப்பாக்கி சூடு – ரவுடிகள் வழக்கறிஞர்களாக வேஷம் போட்டு வெறிச்செயல்!!

0

டெல்லி ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் ரவுடிகளுக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில், பிரபல ரவுடி தாதா கோகி உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற வாயிலில் துப்பாக்கி சூடு:

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்திற்குள் ரவுடிகளுக்குள் நடந்த பயங்கர சண்டை காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.  திடீரென நுழைந்த எதிர் தரப்பினர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த மற்றொரு தரப்பு ரவுடிகளுடன் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரபல ரவுடி தாதா கோகி உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்தரப்பு ரவுடிகள் வழக்கறிஞராக வேடம் போட்டு கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.  பட்டப்பகலில் நீதிமன்ற வாசலில், ரவுடிகளுக்கு இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here