இந்திய தலைநகர் டெல்லியில், பருவநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்று மாசுபாடு அடைந்து வருகிறது. இதனால், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பள்ளி குழந்தைகளின் நலனை காத்திட நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் விடுமுறை அளித்தார். ஆனால், காற்று மாசுபாடு அடைவது குறையாத நிலையில், தொடர் விடுமுறையை அறிவித்தார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, 10, 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, நாளை (நவம்பர் 21) முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிகளில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் காலை கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது என கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., உடனே இத செக் பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!