நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திடீர் மறைவு – முதல்வர் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்!!

0

பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம் பி திரு. மகேந்திர பிரசாத் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உயிரிழந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எம்பி உயிரிழப்பு :

பீகார் மாநிலத்தில், ஜனதா தளம் தலைமையிலான முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி மகேந்திர பிரசாத் உடல்நலக்குறைவு காரணமாக, தனது 81 வது வயதில் நேற்று காலமாகியுள்ளார். உடல் நலிவுற்ற நிலையில் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், காலமான செய்தி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் 1885 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அதன் பிறகு ஜனதா தளத்தில் இணைந்தார். இதுவரை ராஜ்யசபாவுக்கு 3 முறை எம் பி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அவருக்கு ராஜ்யசபா எம்பியாக இன்னும் இரண்டு ஆண்டு பதவிக்காலம் இருந்து வந்த நிலையில், அவரது இந்த திடீர் மறைவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திர பிரசாத்தின் இந்த மறைவு அரசியல் மற்றும் தொழில் துறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here