ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒரே நாளில் 1 கோடி அபராதம் வசூல் – தலைநகரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!

0

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் 1 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஒரே நாளில் 1 கோடி :

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் மிக தீவிரமாக இருந்து வந்தது. இந்த நிலை, கொஞ்சம் மாறி, பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் அண்மையில் விதிக்கப்பட்டது.

 

தற்போது, வரை டெல்லியில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,54,124 உள்ளதாகவும், சிகிச்சை பெறுபவர்கள் 8,397 ஆகவும், 4,759 நபர்கள் வீட்டு தனிமையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து நேற்று, ஒரே நாளில் 1,00,15,300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 45 நபர்கள் மீது எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here