மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இனி விடுமுறை ரத்து – முதல்வர் அதிரடி உத்தரவு!!

0

டெல்லியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மருத்துவ விடுமுறை தவிர பிற விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவு :

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதாவது, அரசு பணியில் உள்ளவர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர மற்ற அனைத்து விடுப்புகளும் தற்போது ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அரசின் மறு உத்தரவு வரும் வரை அரசு ஊழியர்கள் யாரும் வெளியூர் செல்ல கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவு அங்குள்ள அரசு ஊழியர்களிடம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் 50% சுழற்சி முறையில் பணிக்கு வந்து செல்லும் இந்த சமயத்தில், அரசின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here