வாகன ஓட்டிகளுக்கு ஷாக் – இதுவரை இல்லாத புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு அதிரடி நடவடிக்கை!!

0
வாகன ஓட்டிகளுக்கு ஷாக் - இதுவரை இல்லாத புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு அதிரடி நடவடிக்கை!!

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறைகளை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

புதிய உத்தரவு:

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில், காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அங்குள்ள வாகனங்கள் உமிழும் புகை, இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனை கருத்தில் கொண்ட அரசு, வாகனங்கள் இனி மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் மட்டுமே பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

வருகிற அக்டோபர் 25ஆம் தேதி முதல் இந்த புதிய சட்டம், அமலுக்கு வரும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காற்று மாசை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாகவும், அதற்கு உகந்த வழியாக இதுவாக மட்டுமே இருக்கும் என தெரிவித்தார்.

ஆதார் அட்டையை ஷேர் பண்ண போறிங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!

ஏற்கனவே வாகன ஓட்டிகளிடம் டெல்லி அரசு கடுமை காட்டி வரும் நிலையில், இந்த புதிய சட்டம் அவர்களிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போக மாநிலத்தில், பேருந்துகளின் அளவை குறைத்து அதற்கு பதிலாக சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here