Thursday, March 28, 2024

“வேளாண் சட்டங்களை ஒரு போதும் திரும்ப பெற முடியாது” – மத்திய அரசு திட்டவட்டம்!!

Must Read

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு எக்காரணத்தை கொண்டும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டம்:

பஞ்சாப், அரியானா உட்பட 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நாட்டின் தலைநகரான டெல்லியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றது. இந்த போராட்டம் தொடர்ச்சியாக 33 வது நாளாக நடைபெற்று வருகின்றது. மத்திய அரசு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியே அடைந்தது.

அதிரடியாக குறைந்த தங்க விலை – சந்தோச களிப்பில் மக்கள்!!

மீண்டும் ஆறாவது முறையாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் ஏற்கனவே முன்வைத்த 4 நிபந்தனைகளுடன் கூடுதலாக ஒரு நிபந்தனையை முன் வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக தொழில் இணை அமைச்சர் சோம்பிரகாஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை இன்று 2 மணி அளவில் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை விட்டுத்தர முடியாது என்று தெரிவித்துள்ளனர். போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து பல நாடுகள் மற்றும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -