Thursday, April 22, 2021

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு?? பிரதமர் மோடி தலைமையில் பேச்சுவார்த்தை!!

Must Read

டெல்லியில் இன்று காலை 10.30மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. நேற்று இரவு விவசாய சங்க நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்சா பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேளாண்சட்ட திருத்தங்கள்

விவசாயிகளின் போராட்டம் 14நாட்களாக நீடிக்கும் நிலையில் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. 5கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வேளாண்சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதனால் பாரத் பந்த் எனும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்று இரவு முடிவுக்கு வந்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அனைவரும் நல்ல ஆதரவு அளித்தனர். அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து நேற்றிரவு 7மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்சா 13 விவசாய சங்க நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பிறகு இந்தக்கூட்டம் தேசிய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில் விவசாயிகள் கூறும் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழ்வழி மாணவர்களுக்கு TNPSC தேர்வில் 20% இடஒதுக்கீடு!!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தரும் புதிய திருத்தங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என அமித்ஷா தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் முறையிட உள்ளதாகவும், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -