Saturday, April 20, 2024

டெல்லியில் 20வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – வேளாண் சட்டங்கள் ரத்தாகுமா??

Must Read

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 20வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக சாலைமறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாலை மறியல்:

கடந்த 19 நாட்களாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் முக்கிய நுழைவு வாயில்கள் வழியாக “டெல்லி சாலோ” என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 8-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். மேலும், டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மையங்களையும் கைப்பற்றினர். சிங்கு எல்லை, காஜிப்பூர் எல்லை, நொய்டா எல்லை என பல பகுதிகளில் நேற்று காலையிலிருந்தே உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

காஜிப்பூர் எல்லைப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் பாதி சாலை மக்களின் போக்குவரத்திற்க்காக திறந்து விடப்பட்டது. அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த விவசாயிகள் திடீரென முழு சாலையையும் மறித்தனர். இவ்வாறு திடீரென விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாஜகவின் அலுவலகங்கள் முற்றுகை இடப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்தன. அதனால் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகம் மற்றும் பாஜகவின் முக்கிய அலுவலகங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அக்கட்சியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் என ஏராளமானோர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

கமல்ஹாசனை கைவிட்ட ‘டார்ச் லைட்’ சின்னம் – தேர்தலுக்கு முன்பே பின்னடைவு!!

விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம் போன்ற 10 மாநிலங்களைச் சேர்ந்த ஒருசில விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேரில் சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிகின்றன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -