30 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் – மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

0

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 30 நாட்களை எட்டியுள்ளது. நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்:

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் டெல்லியின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 30வது நாளாக நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் இந்த போராட்டங்கள் குறித்து மத்திய அரசும் விவசாய சங்கங்கள் சார்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியையே சந்தித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

farmers protest
farmers protest

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பல கட்சிகள், தன்னார்வல அமைப்புகள் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக போராட்டம் வலுவாக நடைபெற்று வருகின்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட தனது ஆதரவினை தெரிவித்து வந்தார். தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு சார்பில் விவசாய சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக.,வில் இணைந்ததற்கு காரணம் இதுதான் – மக்கள் நீதி மய்யம் முன்னாள் நிர்வாகி விளக்கம்!!

மத்திய வேளாண் துறை இணை செயலாளர் விவேக் அகர்வால், விவசாய சங்கங்கங்களின் தலைவர்களுக்கு ஒரு கடிதத்தினை எழுதி உள்ளார். அதில், “வேளாண் சட்டங்கள் குறித்தும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் திறந்த மனதுடன் விவாதிக்க தயாராக உள்ளோம். அரசும் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் தேதி மற்றும் இடத்தினை விவசாய அமைப்புகளே தேர்ந்தெடுக்கலாம்” இவ்வாறாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here